இந்தியா

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும்: பிரதமரிடம் ராகுல் வலியுறுத்தல்

Published On 2024-06-28 11:14 GMT   |   Update On 2024-06-28 11:16 GMT
  • நீட் தேர்வு விவகாரத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலித்தன.
  • பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி:

சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையில் சிக்கியது. இதனால் இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்தன. பாராளுமன்ற இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகள் விரும்புகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீட் தேர்வு மற்றும் நடைமுறையில் உள்ள வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகிறது.

இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு தீவிர கவலை. இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தி மாணவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News