இந்தியா

2 நாள் ஓய்வுக்கு பின் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்

Published On 2024-01-27 15:15 GMT   |   Update On 2024-01-27 15:15 GMT
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
  • இரண்டு நாட்கள் ஓய்வுக்காக டெல்லி புறப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையை இரண்டு நாட்களுக்கு பிறகு, ராகுல் காந்தி நாளை (ஜனவரி 28) மேற்கு வங்காளம் மாநிலத்தில் துவங்குகிறார். நாளைய யாத்திரை மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் துவங்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி 14-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து துவங்கியது. அங்கிருந்து அசாம் வழியாக மேற்கு வங்க மாநிலத்தின் கூச்பெஹர் மாவட்டத்தை அடைந்தது. கடந்த வியாழன் கிழமை (ஜனவரி 25) கூச்பெஹரில் ரோட் ஷோ நடத்திய ராகுல் காந்தி அதன் பிறகு இரண்டு நாட்கள் ஓய்வுக்காக டெல்லி புறப்பட்டு சென்றார்.

"சிறு இடைவெளியை தொடர்ந்து ராகுல் காந்தி நாளை காலை 11.30 மணிக்கு பாக்தோரா விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஜல்பாய்குரிக்கு சென்று யாத்திரையில் மீண்டும் கலந்து கொள்கிறார். இந்த முறை யாத்திரை நடைபயணம் மற்றும் பேருந்து என இருவிதங்களிலும் நடைபெறும். நாளை இரவு சிலிகுரி பகுதியில் உறக்கத்திற்காக யாத்திரை நிறுத்தப்படும்," என மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சுவங்கர் சங்கர் தெரிவித்து இருக்கிறார். 

Tags:    

Similar News