இந்தியா
null

'ராம்நாத் கோவிட் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி' - உளறிக்கொட்டிய கங்கனா - வைரல் வீடியோ

Published On 2024-08-30 11:02 GMT   |   Update On 2024-08-30 12:26 GMT
  • நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்து வருகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
  • ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி என்று தெரிவித்தார்.

பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்துக்களால் இணையத்தில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். அவர் செய்யும் சிறு தவறுகளைக் கூட நெட்டிஸன்கள் உன்னிப்பாக கவனித்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குறித்த தவறான தகவல்களை வழங்கி மீண்டும் டிராலுக்கு ஆளாகியுள்ளார் கங்கனா. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை காலகட்டத்தில் நடத்த சம்பவங்களை மையமாக வைத்து கங்கனா இயக்கியுள்ள எமர்ஜென்சி படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த படத்திற்கான புரமோஷனில் தீவிரம் காட்டி வரும் கங்கனா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்து வருகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளிக்கும்போது நிலைமை இப்போது நிறைய மாறியுள்ளது, தலித்துகள் ஜனாதிபதியாக ஆகியுள்ளார் என்றும் ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் தலித் ஜானதிபதி கே.ஆர்.நாராயணன் என்று பேட்டியெடுப்பவர் கங்கானாவை திருத்தினார். மேலும் ராம் நாத் கோவிந்தை ராம்நாத் கோவிட் என்றும் கங்கானா அந்த பேட்டியில் உளறிக்கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News