இந்தியா

கஞ்சாவை போலீசார் தீயிட்டு எரித்த காட்சி.

ஆந்திராவில் ரூ.240 கோடி மதிப்பிலான கஞ்சா தீ வைத்து எரிப்பு

Published On 2022-12-25 08:17 GMT   |   Update On 2022-12-25 08:17 GMT
  • கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  • ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா தெரிவித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், குண்டூர், அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜூ, பார்வதிபுரம் மான்யம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மொத்தம் 7,500 ஏக்கரில் பயிரிடப்பட்ட 10 ஆயிரத்து 424 கிலோ கஞ்சா, 133 கிலோ எடையுள்ள திரவ எண்ணெயாக தயார் செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக 929 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தீயிட்டு எரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி ஹரி கிருஷ்ணா தலைமையில் குண்டூர் அருகே உள்ள மைதானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கீழே கொட்டி அதன் மீது கட்டைகளை அடுக்கி போலீசார் தீயிட்டு எரித்தனர். தீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.240 கோடி என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா கூறுகையில்:-

கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக தெரிவித்தார். 

Tags:    

Similar News