இந்தியா

உதவியாளரிடம் ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்: ஜார்கண்ட் மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்

Published On 2024-05-13 03:13 GMT   |   Update On 2024-05-13 03:13 GMT
  • சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.
  • நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர், அலம்கீர் ஆலம். காங்கிரசை சேர்ந்த இவரது தனி செயலாளர் சஞ்சீவ் குமார் லால் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது மந்திரி அலம்கீர் ஆலமை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News