இந்தியா (National)

உ.பி.யில் 6 வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாதி கட்சி

Published On 2024-03-15 13:36 GMT   |   Update On 2024-03-15 13:36 GMT
  • மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
  • பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது.

மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

அதன்படி, யஷ்வீர் சிங் (பிஜ்னோர்), மனோஜ் குமார் (நாகினா), பானு பிரதாப் சிங் (மீரட்), பிஜேந்திர சிங் (அலிகார்), ஜஸ்வீர் வால்மீகி (ஹத்ராஸ்) மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News