இந்தியா

அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தி சமாஜ்வாதி வெற்றி

Published On 2024-06-04 15:59 GMT   |   Update On 2024-06-04 15:59 GMT
  • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்துள்ளார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,56,7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் உள்ள தொகுதியையே பாஜக இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News