மகாராஷ்டிரா அரசியலின் வில்லன் பட்னாவிஸ்தான்: சஞ்சய் ராவத் தாக்கு
- பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
- இதனால் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றார் பட்னாவிஸ்.
மும்பை:
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் வெற்றி கிடைக்காமல் போனது குறித்து ஆலோசிக்க அம்மாநில துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பா.ஜ.க. மேலிடம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாராஷ்டிரா அரசியலில் வில்லன் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்ததற்கு தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம்.
பட்னாவிஸ் பல குடும்பங்களை அழித்துள்ளார் மற்றும் அரசியல் பழிவாங்கலை நாடியுள்ளார்.
மோடி வலுக்கட்டாயமாக ஆட்சி அமைக்க முயன்றால் அது நீடிக்காது என என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
மோடிக்கு கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு மாற்று வழி தேடும் முயற்சியில் சங்கத்தின் உயர்மட்ட தலைமை செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.