இந்தியா

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசிய சரத் பவார் - மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

Published On 2024-07-22 09:56 GMT   |   Update On 2024-07-22 10:03 GMT
  • பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
  • அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சரானார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. பின்னர் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சிவசேனா கட்சி தனது ஆட்சியை தக்கவைத்தது.

பின்னர் சிவசேனா கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சரானார்.

இந்நிலையில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியை உடைத்து விட்டு முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்ரேவுடன் கூட்டணி வைத்துள்ள சரத் பவார் சந்தித்து பேசியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News