இந்தியா

வங்காளதேச வன்முறைக்கு அமெரிக்காவே காரணம்: குற்றம் சாட்டிய ஷேக் ஹசீனா

Published On 2024-08-11 14:32 GMT   |   Update On 2024-08-11 14:36 GMT
  • வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
  • தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியதில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது என்றார்.

புதுடெல்லி:

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினர். அதை அனுமதிக்காமல் நானே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன்.

செயின்ட் மார்டின் தீவை விட்டுக்கொடுத்து வங்காள விரிகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அனுமதித்திருந்தால் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும்.

எனது மண்ணின் மக்களிடம், தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பாவை ஆகிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளன என்ற செய்திகளைப் பார்க்கும்போது என் இதயம் கண்ணீர் வடிக்கிறது.

எனது தந்தையும் என் குடும்பத்தினரும் பாடுபட்ட உருவாக்கிய தேசத்தின் எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News