இந்தியா

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள்- மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Published On 2024-10-14 10:51 GMT   |   Update On 2024-10-14 10:51 GMT
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை.
  • மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது, வெறும் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும் என்று கருத்து.

கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டதால் ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறும் பொதுநலன் மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பை ஏற்படுத்தவே இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும்,கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் எந்தவிதமான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது, வெறும் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் அமர்வ தெரிவித்தது.

Tags:    

Similar News