இந்தியா (National)

சந்திரயான்- 3 ஆகஸ்டு 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்லும்- இஸ்ரோ தலைவர் தகவல்

Published On 2023-07-14 11:58 GMT   |   Update On 2023-07-14 12:35 GMT
  • ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.
  • சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23, மாலை 5.47க்கு நிலவில் தரையிறக்க திட்டம்.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

இந்நிலையில், அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான் விண்கலம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

ரூ.600 கோடி மதிப்பீட்டில் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "சந்திரயான்- 3 ஆகஸ்ட் 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தொழில்நுட்ப ரீதியாக சவாலான மென்மையான தரையிறக்க முயற்சிக்கும்" என்று கூறினார்.

Tags:    

Similar News