இந்தியா

வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்திய கோடீஸ்வரர்கள்

Published On 2024-06-19 16:00 GMT   |   Update On 2024-06-19 16:00 GMT
  • இந்த வருடத்தில் மட்டும் சுமார் 4300 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 5100 ஆக இருந்தாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ் (Henley & Partners) சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வெளிநாட்டிற்கு இடம் பெறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் சுமார் 4300 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 5100 ஆக இருந்தாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட இந்தியா, இந்த பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. சீனா முதல் இடத்திலும், இங்கிலாந்து 2-வது இடத்திலும் உள்ளது.

2024-ல் உலகளவில் 1.28 லட்சம் கோடீஸ்வரர்கள் குடிபெயர்ந்துள்ளனர். இதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவிற்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பு கொண்டவர்களை இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு, வரிச் சலுகைகள், ஓய்வூதிய வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள், சாதகமான வாழ்க்கை முறைகள், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள், சுகாதார அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உட்பட பல காரணத்த்திற்காக இடம்பெயர்கிறார்கள்.

Tags:    

Similar News