இந்தியா

அக்டோபர் 3 முதல் 12-ந் தேதி வரை திருப்பதியில் சிறப்பு தரிசனங்கள் ரத்து

Published On 2024-08-23 07:36 GMT   |   Update On 2024-08-23 07:36 GMT
  • அக்டோபர் 3 முதல் 12-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
  • அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3 முதல் 12-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.

பிரம்மோற்சவத்தின் போது சாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் வருவார்கள். அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 3-ந்தேதி (அங்குரார் ப்பணம் ) முதல் 12-ந் தேதி (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) வரை தினமும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் வி.ஐ.பி. தரிசனம் அதிகாரி பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News