'SHAVE' பண்ண சுரேஷ் கோபி.. படத்தில் நடிக்க அடம்.. ரெய்டு விட்ட மோடி- அமித்ஷா!
- தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், நடிப்புதான் முக்கியம் என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்
- புது லுக்குடன் முழு நேர அரசியல்வாதியாக தனது பதவியின் கடமைகளை சிரம் மேற்கொண்டு செய்ய உள்ளாராம்.
கேரளாவில் முதல் முறையாகக் கடந்த மக்களவை தேர்தலில் கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் நின்ற மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்த வெற்றியைத் தக்கவைக்கும் விதமாக சுரேஷ் கோபிக்கு மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சரானாலும் நடிப்பைக் கைவிட மறுக்கும் சுரேஷ் கோபி ஏற்கனவே சிலபடங்களில் கமிட்டாகி உள்ளார். தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், நடிப்புதான் முக்கியம், என்று சில மாதங்கள் முன்னர் சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிப்பதற்கு மேலிட உத்தரவை எதிர்பார்த்து பாஜக தலைமை அலுவலகத்தின் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த சுரேஷ் கோபிக்கு அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு ஒன்று வந்துள்ளது.
அதாவது, நடிப்பை மொத்தமாக ஒதுக்கிவிட்டு அமைச்சர் பதவியில் கவனம் செலுத்த சுரேஷ் கோபிக்கு கட்சி மேலிடம் கறாரான கண்டிஷன் போட்டுள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனிப்பட்ட முறையில் சுரேஷ் கோபியிடம் இவ்வாறு அறிவுறுத்தியதாகக் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலிடத்தின் உத்தரவை வேத வாக்காக எடுத்துக்கொண்ட சுரேஷ் கோபி தனது 250 வது படமான ஒற்றைக் கொம்பன் படத்துக்காக தான் வளர்த்து வந்த தாடியை சேவ் செய்துவிட்டாராம். மேலும் இனி வாரத்தில் 3 நாட்கள் டெல்லியில்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் சுரேஷ் கோபிக்கு போடப்பட்டதாகத் தெரிகிறது.
எனவே சேவ் செய்த புது லுக்குடன் முழு நேர அரசியல்வாதியாக தனது பதவிக்கான கடமைகளை சிரம் மேற்கொண்டு செய்ய சுரேஷ் கோபி ஆயத்தமாகி வருகிறார். இதற்கிடையே திருச்சூர் பூரம் விழாவுக்கு ஆம்புலன்சில் வந்தது அமளி செய்ததால் சுரேஷ் கோபி CASE வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.