இந்தியா
ஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 4 பேர் பலி
- விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பாஹிமர் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 41 பேர் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் பக்தர்கள். இவர்கள் பீகாரின் கயாவில் இருந்து ஒடிசாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
29 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.