இந்தியா

சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்

Published On 2024-07-10 01:48 GMT   |   Update On 2024-07-10 01:48 GMT
  • பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
  • பெங்களூரு 42வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூரஜ் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார்.

பெங்களூரு:

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.

சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. ஆவார். இந்த நிலையில் அவர் மீது வாலிபர் ஒருவர் ஓரினச்சேர்க்கை புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, பெங்களூரு 42வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூரஜ் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சிவகுமார் நேற்று விசாரித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரருக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தி, சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

சூரஜ் தரப்பு வக்கீலும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.

Tags:    

Similar News