இந்தியா

சந்திரயான் 3 வெற்றி - டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Published On 2023-08-23 13:18 GMT   |   Update On 2023-08-23 13:18 GMT
  • இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
  • விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல் எட்டி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.

இதனை கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சந்திரயான் 3 வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் மற்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட, பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்திரயான் 3 வெற்றிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News