இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக ரூ.300 தரிசன டிக்கெட் வழங்க பரிசீலனை

Published On 2024-08-01 04:55 GMT   |   Update On 2024-08-01 04:55 GMT
  • திருப்பதியில் நேற்று 67,916 பேர் தரிசனம் செய்தனர். 23,010 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
  • 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும்.

அப்படிப்பட்ட சூழலில் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மிக விரைவாக தீர்ந்து விடுகிறது. இதனால் திருப்பதிக்கு நேரில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் போல் நேரடியாக ரூ.300 டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது

இதேபோன்று எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்காக ஆதார் அட்டை மூலம் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதியில் நேற்று 67,916 பேர் தரிசனம் செய்தனர். 23,010 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News