இந்தியா (National)

செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2022-10-23 06:55 GMT   |   Update On 2022-10-23 06:55 GMT
  • இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
  • உலகளாவிய வணிக வெளியீட்டு சேவை சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2வது ஏவுதளத்தின் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம். 3- எம் 2 ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45 வது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதை அங்கிருந்த மைதானத்தில் திரண்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

வணிக பயன்பாட்டுக்காக இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.

இந்தியாவின் மிகப்பெரிய பிரம்மாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட் கருதப்படுகிறது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட் முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

இந்நிலையில், இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

உலகளாவிய இணைப்புக்கான 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களுடன் நம் கனமான ஏவுகணை எல்விஎம்3ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இன்-ஸ்பேஸ்வுக்கு வாழ்த்துகள். உலகளாவிய வணிக வெளியீட்டு சேவை சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News