இந்தியா (National)

பிறந்தநாளன்று 4 நிகழ்ச்சிகளில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Published On 2022-09-16 12:43 GMT   |   Update On 2022-09-16 12:43 GMT
  • நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பதற்காக பிரதமர் மத்திய பிரதேசம் செல்கிறார்.
  • விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு ஐடிஐ மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.

பிரதமர் நரேந்திர மோடி நாளை தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார்.

அதன்படி, வனவிலங்குகள் மற்றும் பெண்கள் அதிகாரத்திற்கான சுற்றுச்சூழல், திறன் மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய நான்கு நிகழ்வுகளில் உரையாற்றுகிறார்.

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பதற்காக அவர் மத்திய பிரதேசம் செல்ல உள்ளார். அங்கு அவர் உரையாற்றுகிறார். பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு ஐடிஐ மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மாணவர்களிடையே உரையாற்றுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், முக்கிய தேசிய தளவாடக் கொள்கையை பிரதமர் மோடி நாளை மாலை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

Tags:    

Similar News