ஜி20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு
- உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.
- பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை (செப்டம்பர் 9, 10) மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.
புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஜி20 மாநாட்டில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.