நெல்லூரில் வழக்கத்துக்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு
- மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.
- தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நெல்லூர் மற்றும் புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடந்தது.
கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை கடந்த போதிலும் நெல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.