இந்தியா

கணவரை எதிர்த்து சுயேட்சையாக மனைவி போட்டி

Published On 2024-04-20 05:04 GMT   |   Update On 2024-04-20 05:04 GMT
  • கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.
  • வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் தெக்கலி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஜில்லா பரிஷத் உறுப்பினராக இருப்பவர் வாணி.

இவரது கணவர் ஸ்ரீநிவாஸ். இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்தார். இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜில்லா பரிஷ்த் துணைத் தலைவர் பதவிக்கு வாணி போட்டியிட்டார்.

இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தெக்கலி தோகுதியில் போட்டியிட இந்த தடவை வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

கடந்த மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாணி கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது கட்சி தலைமை மறுபரிசீலனை செய்து தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் இல்லை என்றால் ஏப்ரல் 22-ந் தேதி கணவருக்கு எதிராக சுயேட்சையாக மனு தாக்கல் செய்யப்படும் என வீடியோ வெளியிட்டு அறிவித்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.

கணவன் மனைவி இருவரும் தற்போது தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News