இந்தியா

நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் யஷ்வந்தபுரம் வழியாக இயங்காது

Published On 2024-06-28 02:20 GMT   |   Update On 2024-06-28 02:20 GMT
  • மறுமார்க்கமாக தாதர்-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11021) இனிமேல் யஷ்வந்தபுரம் வழியாக செல்லாமல் சிக்கபானவாரா, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக இயக்கப்படும்.
  • கடந்த ஆண்டு கே.எஸ்.ஆர். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில், எஸ்.எம்.வி.டி. பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களுக்கு இங்கிருந்து தான் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதனால் இங்கு ஏற்படும் நெரிசலை தவிர்க்க சில ரெயில்களை மாற்றுப்பாதையில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி நெல்லை-தாதர் 'சாளுக்கியா' எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு யஷ்வந்தபுரம் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிமேல் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரெயில் யஷ்வந்தபுரம் வழியாக இயங்காது. இந்த ரெயில் இனி எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக இயங்க உள்ளது. வாரத்தில் திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் கோவில்பட்டி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஓசூர், யஷ்வந்தபுரம் வழியாக இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நெல்லை-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 11022) ஓசூருக்கு அடுத்து எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, சிக்கபானவாரா வழியாக இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக தாதர்-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11021) இனிமேல் யஷ்வந்தபுரம் வழியாக செல்லாமல் சிக்கபானவாரா, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக இயக்கப்படும்.

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கே.எஸ்.ஆர். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில், எஸ்.எம்.வி.டி. பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News