பா.ஜ.க ஆட்சியில் காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர் அமித்ஷா
- கடந்த 70 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு சவால்களையும் ஏற்ற, தாழ்வுகளையும் இந்தியா சந்தித்து உள்ளது.
- ஜனநாயகம் வலுப்பெற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
ஐதராபாத்தில் இன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்தது. இதனை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி பதவி ஏற்ற 8 ஆண்டு காலத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கணிசமான அளவு பயங்கரவாத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக இயங்கிய நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு இயக்கங்களின் செயல்பாடுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஏஜென்சிகள் மற்றும் நாடு முழுவதும் போலீஸ் படையினர் வெற்றிகரமாக நடத்திய சோதனையில் ஒரே நாளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.
சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது.
பயங்கரவாத செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. கடந்த 70 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு சவால்களையும் ஏற்ற, தாழ்வுகளையும் இந்தியா சந்தித்து உள்ளது.
இதற்காக 36 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து உள்ளனர். ஜனநாயகம் வலுப்பெற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.