குற்றவாளிகள் என்பதால் அவர்களது வீடுகள் இடிக்கப்படுவது முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது- உச்சநீதிமன்றம் அதிரடி
- குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவித்து அவருடைய வீட்டை இடிக்க உத்தரவிட நிர்வாகிகள் நீதிபதியாகிவிட முடியாது.
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பின் கீழ் உள்ளது.
பா.ஜ.க. ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது.
* குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவித்து அவருடைய வீட்டை இடிக்க உத்தரவிட நிர்வாகிகள் நீதிபதியாகிவிட முடியாது.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய வீடுகள் இடிக்கப்படுவது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பின் கீழ் உள்ளது. அதேபோல் கிரிமினல் சட்டத்தின் கீழும் உள்ளது.
* ஒரேநாள் இரவில் பெண்கள், குழந்தைகள் தெருவிற்கு வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இல்லை.
* வீடுகள் இடிக்கப்படும் நடவடிக்கையை வீடியோ எடுக்க வேண்டும்.
* பலவருடங்கள் கடினமாக உழைத்து சராசரி மனிதன் வீடு கட்டுகிறான். இது அவனுடைய கனவு, அபிலாசைகள். பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக கட்டுகிறான். அதை அவர்களிடம் இருந்து பறித்து விட்டால், அது அதிகாரிகளை திருப்பிப்படுத்துவதற்காக மட்டுமே.