இந்தியா

என்டிஏ ஆட்சியை இழந்தபின் மிகப்பெரிய முடிவை எடுப்பார்: நிதிஷ் குமார் குறித்து தேஜஸ்வி கணிப்பு

Published On 2024-05-28 14:06 GMT   |   Update On 2024-05-28 14:06 GMT
  • மோடி தோல்வியடைந்து விட்டார். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவரால் பிரதமராக இருக்க முடியாது.
  • மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை என்டிஏ கூட்டணி இழந்த பிறகு அவர் மிகப்பெரிய முடிவை எடுக்கலாம்.

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் பாஜக உடனான தொடர்பை முறித்துக் கொண்டு லாலு கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக திடீரென லாலு கட்சி உடனான தொடர்பை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜக-வுடன் உறவை புதுப்பித்துக் கொண்டார்.

இதனால் நிதிஷ் குமாரை லாலு மகன் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து என்டிஏ கூட்டணி ஆட்சியை இழந்தபின் நிதிஷ் குமார் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறிகையில் "மோடி தோல்வியடைந்து விட்டார். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவரால் பிரதமராக இருக்க முடியாது. நாடு புதிய அரசை பெறப்போகிறது. என்னுடைய மாமா நிதிஷ் குமாரை பற்றி ஒரு விசயத்தை சொல்லப் போகிறேன். மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை என்டிஏ கூட்டணி இழந்த பிறகு அவர் மிகப்பெரிய முடிவை எடுக்கலாம்.

துரோகம் செய்தது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம், தற்போது என்னுடைய கணிப்பு அவருடைய கட்சியை காப்பாற்றுவதற்காகவும், அவருடைய ஓபிசி ஆதரவு அரசியலை பாதுகாக்கவும் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என்பது எனது கணிப்பு. ஜூன் 1-ந்தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வேன்" என்றார்.

Tags:    

Similar News