இந்தியா (National)

வாக்குகளாக மாறிய மக்களின் கோபம்.. மண்ணைக் கவ்வும் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி.. இந்தியா கூட்டணி முன்னிலை

Published On 2024-06-04 10:10 GMT   |   Update On 2024-06-04 10:16 GMT
  • மதியம் 3 மணி நிலவரப்படி 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 19 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.
  • சிவா சேனாவின் வில் அம்பு சின்னம் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட நிலையில் ஒளிரும் தீப்பந்தம் சின்னத்தில் அவர் களம் கண்டார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மதியம் 3 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 19 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.

மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலைவராக பதவியேற்றார். சிவ சேனா கட்சி யாருக்கு சொந்தம் என்ற பனிப்போர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே வெடித்துள்ள நிலையில் இதுதொடர்பான வழங்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து உத்தவ் தாக்கரே களம் கண்டார். சிவா சேனாவின் வில் அம்பு சின்னம் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட நிலையில் ஒளிரும் தீப்பந்தம் சின்னத்தில் அவர் களம் கண்டார்.

தேர்தலை சந்திக்காமல் அரசியல் காய் நகர்த்துதல் மூலம் பாஜக பக்கம் சாய்ந்து முதலைவரான ஏக்நாத் ஷிண்டே மீது சிவ சேனா ஆதரவாளர்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா மக்களின் கோபமே சின்னம், பெயர் என அனைத்தும் மாறிய நிலையிலும் சிவ சேனாவை கட்டியெழுப்பிய பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவுக்கான வாக்குகளாக மாறி அவர் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியை முன்னிலையில் நிறுத்தியுள்ளது என்று பார்க்கமுடிகிறது. 

Tags:    

Similar News