இந்தியா

வற்றியது ஜீவ நதி.. கொளுத்தும் வெயிலால் கங்கைக்கு ஏற்பட்ட அவல நிலை - வீடியோ

Published On 2024-06-16 08:11 GMT   |   Update On 2024-06-16 08:13 GMT
  • கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
  • மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வெப்ப நிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் மக்கள் சொல்லிலடங்கா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பஞ்சம், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் என நிலைமையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களின் நிலைமை இன்னும் மோசமானது ஆகும்.

நாட்டில் இதுவரை ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அரசியல் போட்டியில் அண்டை மாநிலமான அரியானா யமுனை நதி நீரை அடைத்து வைத்துள்ள நிலையில் தலைநகர் டெல்லி தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த ஒன்றரை மாத காலமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

நீர் வற்றிய நிலையில் கற்பாறைகளும், குப்பைக்கூளங்களும், உடைந்த படகுகளும் நதி மணலில் கிடப்பது காண்போருக்கு வெயிலின் கொடுமையைதெள்ளிதின் உணர்த்துகிறது. வற்றாத ஜீவ நதியான கங்கையின் நிலைமையே இப்படியாக இருக்கும் நிலையில் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 இமய மலையில் உருவாகி வங்கக்கடலில் கடக்கும் கங்கை நதி இந்து மதத்தில் புனத்தமனாதாக பராக்கப்படும் நிலையில் மக்கள் அதிகம் புழங்குவதால் மிகுந்த அழுக்கடைந்த நிலையில் மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News