மோசமான காற்று மாசுபாடு: டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டன
- இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என தகவல்
- குழந்தைகள், முதியவர்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று காலை அது மிகவும் மோசடைய, மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் லோதி சாலை, ஜஹான்கிர்புரி, ஆர்.கே. புரம், விமான நிலையம்(டி3) பகுதிகளில் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசு அளவிடு இந்த பகுதிகளில் முறையே 438, 491, 486 மற்றும் 473 எனப் பதிவாகியுள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் முக்கியத்துவம் இல்லாத கட்டட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெல்லியின் அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள விவசாய இடங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், சாதகமற்ற வானிலை நீடிப்பதாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மோசமான நிலையில்தான் இருக்கும் என வல்லுனர்கள் தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளர். மருத்துவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.