இந்தியா

வீட்டின் மீது கருப்பு மை வீச்சு..'சாவர்க்கர் பாணி கோழைத்தனம்' - ஒவைசி ஆவேசம்: வீடியோ

Published On 2024-06-28 01:47 GMT   |   Update On 2024-06-28 01:47 GMT
  • ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • டெல்லியில் உள்ள எனது வீட்டின் மீது எத்தனை முறை தாக்குதல் நடந்துள்ளது என்ற எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாத அளவுக்கு அத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளன.

தெலங்கானாவில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிவரும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். தனது பதியேற்பின்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடந்தி வரும் போரைக் கண்டிக்கும் வகையில் ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஒவைசி, ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் அப்படி கூறக்கூடாது என்று எங்காவது விதி உள்ளதா காட்டுங்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கிடையில் தற்போது பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருவதால் டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில் ஒவைசி தங்கியுள்ள நிலையில் நேற்று [ஜூன் 28] இரவு அவரது இல்லத்தின் பெயர் பலகை உள்ள முன் புற சுவரின் மீது மர்ம நபர்கள் கருப்பு மையை ஊற்றிவிட்டுத்  தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டின் சுவர் மீது உள்ள கருப்பு மையை காவலர்கள் நீக்கும் காட்சிகளை படம்பிடித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இந்த சம்பவத்துக்கு ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, மர்ம நபர்கள் எனது வீட்டின் மீது கருப்பு மையை ஊற்றி அத்துமீறியுள்ளனர். டெல்லியில் உள்ள எனது வீட்டின் மீது எத்தனை முறை தாக்குதல் நடந்துள்ளது என்ற எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாத அளவுக்கு அத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளன. தாக்குதல் குறித்து டெல்லி போலீசிடம் கேட்டபோது அவர்கள் கைவிரித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் குறிப்பிட்டு, இது உங்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடத்தில் நடக்கிறது என்றும், மக்களவை சபாநாயர் ஓம் பிர்லாவைக் குறிப்பிட்டு எம்.பிக்களுக்களின் பாதுகாப்பு ஊறுதிப்படுத்தப்படுமா என்று எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், குண்டர்கள் எனது வீட்டை மீண்டும் மீண்டும் குறிவைக்கின்றனர். இது என்னை பயமுறுத்தாது, சாவர்க்கர் பாணியிலுள்ள இதுபோன்ற கோழைதனத்தை நிறுத்திவிட்டு என்னோடு நேருக்கு நேராக மோதுங்கள். ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மையையும் சில கற்களை வீசுவதாலும் என்னை விரட்டி விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News