இந்தியா

மத்திய பட்ஜெட் 2023: ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2023-02-01 06:30 GMT   |   Update On 2023-02-01 08:29 GMT
  • அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
  • 9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் உள்ள அம்சங்கள்:

  • 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்
  • மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன
  • குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்படும்
  • வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளத்துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு.
  • சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்
  • 2047-ம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • கர்நாடகாவில் வறட்சி நிலவும் பகுதியில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு
  • பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.
  • மூலதன செலவினங்களுக்கான முதலீடு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  • சாலை பணிகளுக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு
  • பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்
  • ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்
  • மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்
  • செயற்கை நுண்ணறிவிற்காக மேன்மைமிகு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன.
  • தரவு மேலாண்மை கொள்கை வகுக்கப்படும்
  • 9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
  • அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
  • மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படும் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும்
  • பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
Tags:    

Similar News