இந்தியா

எக்ஸ்-ல் 10 கோடி பாலோவர்களை கடந்த பிரதமர் மோடி- மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

Published On 2024-07-14 14:21 GMT   |   Update On 2024-07-14 14:21 GMT
  • கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார்.
  • சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி ஒருவர்.

இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

அந்த வகையில்பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது, மற்ற அரசியல் தலைவர்களை விடவும் பிரதமர் மோடி தனித்து நிற்பதை காட்டுகிறது.

இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆர்ஜேடியின் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன், NCP தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்கள்.

பிரதமர் மோடி, கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார். 10 கோடி பாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளார்.

Tags:    

Similar News