கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு கட்டாய திருமணம், அழுது கொண்டே தாலி கட்டிய சோகம்
- இந்த திருமணங்களை ‘ஜாப்ரிய விவாஹா’ என கூறுகின்றனர்.
- பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவராக பணிபுரியும் சத்யம் குமார் ஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரை மிரட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் சிலர் கட்டயா தாலி கட்ட வைத்துள்ளனர்.
இதுகுறித்து மணமகனின் தந்தை போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். இதனை 'ஜாப்ரிய விவாஹா' என கூறுகின்றனர்.
பொதுவாக அதிக ஊதியம், சொத்து, சமூக அந்தஸ்து வைத்திருக்கும் மணமாகாத ஆண்கள், மணமகளின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த வீடியோக்களும் சமூக வலைதங்களில் பிரபலமாக பகிரப்படு வருகின்றன.