இந்தியா

நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு முன்கூட்டியே எச்சரித்தோம்- அமித்ஷா

Published On 2024-07-31 10:04 GMT   |   Update On 2024-07-31 10:04 GMT
  • மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.
  • மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

அதில், கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம். எச்சரிக்கையை குஜராத் அரசு அபாயத்தைப் புரிந்துக்கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை.

இதுபோல், மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றாதது ஏன் ?

முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தான், தேசிய பேரிடர் மீட்பு படை முன்கூட்டியே அங்கு சென்றது.

மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீத தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News