இந்தியா

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Published On 2024-01-11 06:03 GMT   |   Update On 2024-01-11 06:03 GMT
  • உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அண்டை நாடான பாகிஸ்தான் 101 இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனா 62-வது இடத்தைப் பிடித்தது.

புதுடெல்லி:

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற பாஸ்போர்ட் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலின்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகியவை முதலிடத்தில் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் 194 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்றுள்ளனர்.

தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 இடங்களுக்கான அணுகலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன 192 இடங்களுக்கு பயணம் செய்ய அனுமதித்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சீனா 62-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா 80வது இடத்தில் நீடிக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான் 101-வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News