இந்தியா
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்- தற்காலிக குழு அமைக்க முடிவு
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம்.
- மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என அறிவிப்பு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக குழு அமைக்க கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.