சிறப்புக் கட்டுரைகள்

கேது தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

Published On 2024-07-23 11:00 GMT   |   Update On 2024-07-23 11:00 GMT
  • லக்னம் எனும் ஒன்றாம் இடத்தில் கேது பலம் பெற்றால் தெய்வீக கலை முகத்தில் இருக்கும்.
  • ஜாதகருக்கு தாய் வழி பாட்டியிடம் நெருக்கம் அதிகமாக இருக்கும்.

கேது ஒரு நிழல் கிரகம்.

பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டவர் கேது. உருவம் இல்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால் உடலில் சூட்சமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்தியாகும். அதன்சக்தி நமக்குத் தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் புரியும். அதே போல் லவுகீகம் எனும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை ஆழ் நிலை தியானம், ஆன்மீக நாட்டத்தின் மூலம் பக்குவப்படுத்தி அடக்கி முக்தி அடையச் செய்பவர் கேது. இவர் தான் முக்திக்கு அதிபதி. உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் ஒருவருக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை நிர்ணயிப்பவர் இவர். இனி பனிரெண்டு பாவகங்களில் கேது நிற்பதால் ஏற்படும் பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.

லக்னத்தில் கேது: லக்னம் எனும் ஒன்றாம் இடத்தில் கேது பலம் பெற்றால் தெய்வீக கலை முகத்தில் இருக்கும். நல்ல நடத்தை உண்டு. அனைத்து விசயங்களையும் தெரிந்து வைத்திருப்பார். காரிய சாதனை வெற்றி உடையவர். பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும். ஜாதகருக்கு தாய் வழி பாட்டியிடம் நெருக்கம் அதிகமாக இருக்கும். லக்னத்தில் கேது பலம் குறைந்தால் முரட்டுத்தனமான தோற்றம் இருக்கும் அல்லது அசட்டுத்தனம் நிரம்பியது போன்ற தோற்றம் அளிப்பார். தனித்து வாழ்வதை ஜாதகர் விரும்புவார். ஜாதகரிடம் யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். முறையற்ற வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வார். கஞ்சத்தனம் நிறைந்தவராக இருப்பார்.

பரிகாரம்: சனிக்கிழமை விநாயகர் வழிபாடு சிறப்பைத் தரும்.

இரண்டில் கேது: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தில் கேது சுபத்துவம் பெற்றால் பேச்சில் தெய்வீகம் நிறைந்து இருக்கும். வாக்குப் பலிதம் உண்டு. அருள்வாக்கு கூறுபவர்கள். பஞ்சாயத்து பேசி சமரசம் செய்வதில் வல்லவர்கள். குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழி நடத்துவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. சூடான, சுவையான உணவை, சுத்தமான, சைவ உணவை விரும்புவார்கள். கேது பலம் குறைந்தால் பேசும் போது வஞ்சனை கலந்து பேசுவார். முன் கோபம் நிறைந்தவர். திக்குவாய் கோளாறு உள்ளவர். போதை பொருட்களுக்கு அடிமைப்படுவார்கள்.வருமானக் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். திறமை இருந்தாலும் முன்னேற முடியாது. தவறான வாக்கு கொடுத்து மாட்டுவார்கள்.

குடும்பத்துடன் ஒட்டாத வாழ்க்கை ஏற்படும். குடும்ப பிரச்சனை அதிகமாகி பஞ்சாயத்து, கேஸ் வரை செல்லும்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும்.

முன்றில் கேது: மூன்றாமிடமான முயற்சி சகாய ஸ்தானத்தில் கேது சுப பலம் பெற்றால் சாஸ்திர ஞானம் நிறைந்தவர். முயற்சிகளில் வெற்றி உண்டு. எடுத்த காரியம் ஜெயமாகும். உடன் பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். ஜாதகர் முரட்டுத்தனம், பிடிவாத குணம் உள்ளவர். கேது அசுப பலம் பெற்றால் முயற்சியில் தோல்வியடைவார்கள். எடுத்த காரியங்கள் தடை, தாமதம் தரும். உடன் பிறப்புகளுடன் தீராத தீர்கக முடியாத வம்பு வழக்கு இருக்கும் அல்லது இளைய சகோதரம் இல்லை. சகோதர தோஷம் உண்டு.

ஆபரணங்கள் தொலையும். அதீத கவலை உண்டு. சொத்தில் வில்லங்கம், எல்லைத் தகராறு, பட்டா, பத்திரத்தில் குழப்பம் இருக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகாது. காது, மூக்குத் தொண்டை சார்ந்த உபாதைகள் உண்டு.


 பரிகாரம்: செவ்வாய் கிழமை சனி ஓரையில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

நான்கில் கேது: சுக ஸ்தானம் எனும் 4-ம் வீட்டில் கேது சுப பலம் பெற்றால் கல்விக்கு மீறிய திறமையும், அனுபவமும் உண்டு. தாயின் ஆதரவு உண்டு. தாயார் வழி உறவுகளின் ஆதரவு, சொத்து கிடைக்கும். வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சுய சம்பாத்தியத்திலும் சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருமானம் உண்டாகும்.

ஜாதகர் ஆரோக்கியமானவர். கேது பலம் குறைந்தால் ஆரம்ப கல்வியில் தடை இருக்கும். தாய் வாழாதவர். தாய் வழிச் சொத்தில் வம்பு, வழக்கு இருக்கும். எளிதில் சொத்து அமையாது. பழைய சிதிலமடைந்த வீட்டில் வாழ்வார்கள். அரசியல் தோல்வி உண்டு. விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆதாயம் குறையும். நல்ல ஒழுக்கம் இருக்காது. வாழ்க்கையில் சலிப்பு சங்கடங்களே மிஞ்சும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை வராகர் மற்றும் வராகியம்மனை வழிபட வேண்டும்.

ஐந்தில் கேது: 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பலம் பெற்றால் ஜாதகர் பல கலைகளும் கற்றுத் தேர்ந்தவர். திடமான மனம் தன்னம்பிக்கை உடையவர். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். தலைமைப் பதவி தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு.அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும்.குல தெய்வ கடாட்சம் உண்டு. கேது பலம் குறைந்தால் பரிகாரம், வைத்தியத்தியத்தின் மூலம் புத்திரப்பேறு கிடைக்கும். பிள்ளைகளால் மன வேதனை மிகும். பூர்வீகச் சொத்து கிடைக்காது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. குல தெய்வ அருள் கிடைக்காது. அதிர்ஷ்டம் குறைவுபடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ஊரின் எல்லை, காவல் தெய்வங்களை வழிபட வேண்டும்.

ஆறில் கேது: ருண, ரோக, சத்ரு ஸ்தான

மான 6-ம் வீட்டில் மறைவு ஸ்தானத்தில் அசுப கிரகங்கள் நிற்பது நல்லது.

ஐ.ஆனந்தி

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டு. துணிவு, வீரம், விவேகம் உண்டு. விஷத் தீண்டுதல் பயம் உண்டு. ஆறில் கேது இருப்பவர்களுக்கு கடன் தொல்லை இருக்காது என்ற கருத்து ஒரு சாரரிடம் நிலவி வந்தாலும் ஆறில் கேது உள்ளவர்கள் கடனால் அனுபவிக்கும் இன்னல்கள் சொல்லி மாளாது.. கடனுக்கு பயந்து நோய் வருகிறது. வெகு சிலர் கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழுகிறார்கள் - தாய் மாமன் ஆதரவு குறைவு .ரகசிய நோய் தாக்கம் இருக்கும். ஆறில் கேது ராஜயோகம் அல்ல. சாபக்கேடு.

பரிகாரம்: சனிக்கிழமை எமகண்டத்தில் விநாயகரை வழிபட வேண்டும்.

ஏழில் கேது: களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் கேது நின்றால் திருமணம் பலமுறை தள்ளிப்போகும். அன்னிய உறவில் தாரம் அமையும். இருதார யோகம் உண்டு. திருமண வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். இல்லறத் துறவி போல் வாழ நேரும். சிலருக்கு நோயாளி வாழ்க்கைத் துணை கிடைக்கும். எப்படி பொருத்தம் பார்த்தாலும் மண வாழ்க்கை மன வருத்தத்தை தராமல் போகாது. அனைவரையும் பகைத்துக் கொள்ளும் குணம் உள்ளவர்கள். நண்பர் களால், தொழில் கூட்டாளிகளால் வாழ்க்கைத் துணையால் வம்பு, வழக்கு அவமானம் உண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபட வேண்டும்

எட்டில் கேது: மொத்த வம்பு வழக்கின் குத்தகை எட்டாமிட கேது. சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை ஓட்டுவார்கள். கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன் மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலை செய்து கடுமையாக உழைத்தவர்கள் போல் பாவனை காட்டுவார்கள். தொடர்ச்சியான வருமானம் இருக்காது குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் பேச்சை உதாசீனம் செய்வார்கள். குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவு குறையும்.

எதனையும் மிகைப்படுத்தலாக கூறுவார்கள். யாராவது எதிர்த்தால் அமைதியாவார்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சுவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

பரிகாரம்: திங்கட்கிழமை எம கண்டத்தில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

ஒன்பதில் கேது: பாக்கிய ஸ்தானமான 9-ல் கேது பலம் பெற்றால் தெய்வாதீனம் நிரம்பியவர்கள். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள்.

தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்ள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். துறவு மனப்பான்மை உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள். பித்ருக்களின் நல்லாசி உண்டு. தந்தையின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்ப பெற்றவர்கள்.

கேது பலம் குறைந்தால் தந்தையின் ஆதரவு இருக்காது. பித்ரு தோஷம் நிரம்பியவர்கள். மத மாற்ற சிந்தனை இருக்கும் அல்லது மத நம்பிக்கை குறையும்.பூர்வீகத்தில் வாழ முடியாது.

பரிகாரம்: அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

பத்தில் கேது: பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. பத்தில் கேது சுப வலுப்பெற்றால் பார்ப்பது கேட்பது மூலம் எந்த தொழிலையும் எளிதில் கற்றுக் கொள்வார்கள். யாருக்கும் பணிய மாட்டார்கள். யாரையும் மதிக்க மாட்டார்கள். பிறர் உதவியை விரும்ப மாட்டார்கள். குறுக்கு வழி பிடிக்காது. ஞானம், முதிர்ச்சி உடையவர். பணத்தாசை கிடையாது. கேது பலம் குறைந்தால் பல தொழில் ஞானம் உண்டு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் இவர்களின் ஞானம் இவர்களுக்கு பயன்படாது. இவரைச் சார்ந்தவர்கள் இவரை பயன்படுத்துவார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

பதினொன்றில் கேது: பதினொன்றாம் இடமான லாப ஸ்யா நிற்கும் எந்த கிரகமும் பெரிய தொந்தரவை தராது. ஆனால் பதினொன்றில் கேது இருப்பவர்களில் பலர் சித்தப்பா, மூத்த சகோதரம் மற்றும் வைப்பாட்டியால் வீணாப்போனவர்கள்.

பரிகாரம்: ஏகாதசி திதியில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

பனிரெண்டில் கேது: பனிரெண்டில் கேது இருந்தால் மோட்சம் உண்டு என்பார்கள். தூக்கம் குறையும். ஆன்மீக நாட்டம் அதிக

மாக இருக்கும்.12ல் கேது இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாக அமையும்.

பரிகாரம்: சனி பிரதோஷ நாட்களில் கொள்ளு தானம் வழங்க வேண்டும்.

பொதுவாக கேதுவின் சுப அதிர்வலைகள் கிடைக்க கணபதியை வழிபாடு செய்வது நல்லது.

செல்: 98652 20406

Tags:    

Similar News