செய்திகள் (Tamil News)

4வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்து வெற்றி பெற 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

Published On 2018-06-21 16:53 GMT   |   Update On 2018-06-21 16:53 GMT
இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ்டீரிட் நகரில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #Australia #England
லண்டன்:

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் இங்கிலாந்து  வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

முதலில் இருந்தே இந்த நிதானமாக விளையாடியது. இதனால் அணியின் எண்ணிக்கை 101 ரன்களாக இருக்கும்போது ஹெட் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் பிஞ்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை திறம்பட சமாளித்து சதமடித்து அசத்தினர்.

அணியின் எண்ணிக்கை 225 ஆக இருக்கும்போது பிஞ்ச் 100 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 101 ரன்களில் அவுட்டாகினார்.



இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #AUSvsENG
Tags:    

Similar News