செய்திகள்

கூலித்தொழில் செய்யும் முன்னாள் வில்வித்தை வீரருக்கு விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி

Published On 2018-07-24 10:28 GMT   |   Update On 2018-07-24 10:28 GMT
தெற்கு ஆசிய போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் வீரர் ஏழ்மையில் வாடுவதால் மத்திய அமைச்சகம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெத்பூரைச் சேர்ந்தவர் அஷோக் சோரேன். இவர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தெற்கு ஆசிய போட்டியில் வில்வித்தை பிரிவில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றார். இவர் தற்போது பணமில்லாமல் மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கூலித் தொழில் செய்து வருகிறார்.



இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்வர்தன் ரத்தோர் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பண்டித் தீன்தயாள் உபத்யாய் தேசிய நல நிதி திட்டத்தின் கீழ் இந்த பணம் வழங்கப்படும்.
Tags:    

Similar News