செய்திகள்

அஸ்வினின் ‘மன்காட்’ ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க விழிப்புடன் இருந்த டேவிட் வார்னர்

Published On 2019-04-09 10:10 GMT   |   Update On 2019-04-09 10:10 GMT
ஜோஸ் பட்லரை போன்று ‘மன்காட்’ ரன்அவுட்டாகி விடக்கூடாது என்பதில் டேவிட் வார்னர் மிகவும் கவனமாக இருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. #IPL2019
ஐபிஎல் 2019 கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சீசனின்போதும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும், சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கம். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஜோஸ் பட்லரை அஸ்வின் ‘மன்காட்’ முறையில் ரன்அவுட் ஆக்கினார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. கிரிக்கெட் விதிமுறையை வகுக்கும் எம்சிசி-யே இதுகுறித்து ஆய்வு நடத்தியது.

இந்நிலையில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது அஸ்வின் பந்து வீச முயன்றபோது வார்னர் க்ரீஸை விட்டு சற்று வெளியே நகர முயன்றார்.

அதற்குள் அவருக்கு ஜோஸ் பட்லர் ‘மன்காட்’ ரன்அவுட் ஞாபகம் வந்தது. இதனால் வாரன்ர் க்ரீஸ்-க்குள் பேட்டை வைத்துக் கொண்டார். அஸ்வின் கையில் இருந்து பந்து சென்றபிறகே க்ரீஸில் இருந்து நகர்ந்து சென்றார்.
Tags:    

Similar News