கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பையில் யாஷ் துல் சதம்: 3ம் நாள் முடிவில் டெல்லி 264/8

Published On 2024-10-20 21:51 GMT   |   Update On 2024-10-20 21:51 GMT
  • தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
  • 3ம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெடுக்கு 264 ரன்கள் எடுத்தது.

புதுடெல்லி:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.

தொடர்ந்து ஆடிய டெல்லி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் யாஷ் துல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். பிரணவ் ராஜவன்ஷி 40 ரன்னும், சங்க்வான் 36 ரன்னும், தியாகி 35 ர்ன்னும் எடுத்தனர்.

இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது, யாஷ் துல் 103 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Tags:    

Similar News