ஆஸ்திரேலியாவில் ரோகித், கோலி சொதப்புவதற்கு அதிக வாய்ப்பு- மைக்கெல் வாகன்
- விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ரன்களை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
- அந்த மூன்று பந்துவீச்சாளர்களையும் சமாளிக்க வேண்டும் என்றால் இருவருமே மிகச் சிறந்த மனநிலையில் இருக்க வேண்டும்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.
அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும்.
ரோகித் மற்றும் விராட் கோலி கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட கடக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தாலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை பயமுறுத்த காத்திருப்பார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ரன்களை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்கள் சொதப்பதற்க்கு வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடுவது சாதாரண விஷயம் அல்ல.
அதிலும் குறிப்பாக பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற உலகத் தரமான பந்துபந்துவீச்சாளர்கள் ஒன்று சேர்ந்து அட்டாக் செய்ய உள்ளனர். இதன் காரணமாக ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த விசயம் தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.
அந்த மூன்று பந்துவீச்சாளர்களையும் சமாளிக்க வேண்டும் என்றால் இருவருமே மிகச் சிறந்த மனநிலையில், சரியான டெக்னிக்குடன் விளையாட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த தொடரிலும் தடுமாற அதிக வாய்ப்பு இருக்கும்.
இவ்வாறு மைக்கல் வாகன் கூறினார்.