கிரிக்கெட்

ரூ. 11,637 கோடி.. 2023 உலகக் கோப்பை தொடரில் கல்லா கட்டிய இந்தியா

Published On 2024-09-11 11:23 GMT   |   Update On 2024-09-11 11:23 GMT
  • இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களை விட மிகப்பெரியது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.

உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சக்திவாய்ந்த அணியாகவும் இந்தியா விளங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி தொடர்களில் இருந்து அதிகளவு வருவாய் ஈட்டப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஐசிசி அறிக்கையின் படி 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து பிசிசிஐ-க்கு ரூ. 11 ஆயிரத்து 637 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையின்படி, இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களை விட கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகப்பெரியது என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரமசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பூனே என நாட்டின் பத்து நகரங்களில் நடைபெற்றன.

Tags:    

Similar News