கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதம்... டிராவிட்டை முந்தி ஜோ ரூட் சாதனை

Published On 2024-08-25 06:02 GMT   |   Update On 2024-08-25 06:02 GMT
  • ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.
  • சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 144 போட்டிகளில் விளையாடி 12131 ரன்கள் குவித்துள்ளார்.

33 வயதான ஜோ ரூட் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட்ட் கிரிக்கெட் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் 62 ரன்கள் அடித்து புதிய சாதனை ஒன்றை ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த அரைசதத்தோடு ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஆலன் பார்டரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்.

Tags:    

Similar News