2025 ஐபிஎல் தொடரில் 'அன் கேப்ட் பிளேயராக' எம்.எஸ்.டோனி? - உற்சாகத்தில் ரசிகர்கள்
- அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
இந்நிலையில், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அப்படி எந்த கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் அதே சமயம் அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்தது. எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தை ஒட்டி, அந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வர, ஐபிஎல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.