கிரிக்கெட் (Cricket)

இப்படி ஒரு ரன்அவுட் சர்ச்சையை பார்த்து இருக்கிறீர்களா?...

Published On 2024-10-05 02:32 GMT   |   Update On 2024-10-05 02:32 GMT
  • கடைசி பந்தில் ஒரு ரன் போதும் என முதலில் நியூசிலாந்து வீரர்கள் நினைத்தனர்.
  • பீல்டர் கையில் பந்து இருக்கும்போதே நடுவர் ஓவர் முடிந்ததாக அறிவித்த நிலையில், 2-வது ரன் ஓடினர்.

பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா சார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 160 ரன்கள் குவித்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியாவால் 102 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி 14-வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மிகப்பெரிய அளவில் இதுவரை நாம் பார்த்திராத ரன்அவுட் சர்ச்சை ஏற்பட்டது.

14-வது ஓவரை ஷர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் எதிர்கொண்டு லாங்-ஆஃப் திசையில் அடித்தார். பந்து பீல்டர் கைக்கு சென்றது. அப்போது நியூசிலாந்து பேட்டர்கள் ஆன அமெரியா கெர், ஷோபி டெவைன் ஆகியோர் நடந்து சென்று ஒரு ரன் எடுத்தனர்.

பீல்டரான் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை கையில் எடுத்து, அடுத்த ஓவர் பீல்டிங்கிற்காக நடந்து வந்தார். அப்போது நடுவர் பந்து வீச்சாளரான ஷர்மாவிடம் தொப்பியை கொடுப்பார். ஷர்மாவும் அதை வாங்கி பீல்டிங் செய்ய தயாராகுவதற்கு செல்வார்.

இதற்குள் நியூசிலாந்து பேட்டர்கள் என்ன நினைத்தார்களோ... 2-வது ரன்னுக்கு ஓட முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட பீல்டர் பந்தை கீப்பர் திசையில் வீசுவார். கீப்பர் பந்தை பிடித்து அடிக்க அமெலியா கெர் ரன்அவுட் ஆவார்.

ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிடுவார். நாங்கள் ஓவர் முடிந்ததாக அறிவித்துவிட்டோம். இதனால் Dead Ball என்ற கணக்கில் ஆகிவிடும் என்றனர்.

ஆனால் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் ரன்அவுட் கொடுக்கப்படவில்லை. அடுத்த ஓவரில் அமெலியா கெர் ஆட்டமிழந்துவிடுவார்.

பொதுவாக பந்து கீப்பர் கையில் சென்ற பின்னர்தான் Dead Ball ஆகும். ஆனால் பீல்டர் கையில் இருக்கும்போது நடுவர் எவ்வாறு ஓவர் முடிந்தது என்று அறிவித்தாரோ... எனத் தெரியவில்லை.

இந்த ரன்அவுட் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News