கிரிக்கெட் (Cricket)

எளிதில் நிதானத்தை இழக்கும் கேரக்டர்: கவுதம் கம்பீருக்கு ரிக்கி பாண்டிங் பதிலடி

Published On 2024-11-13 06:57 GMT   |   Update On 2024-11-13 06:57 GMT
  • விராட் கோலி கடந்த சில வருடங்களில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அவர் ஃபார்மின்றி தவித்து வருகிறார்- பாண்டிங்
  • ரிக்கி பாண்டிங் முதலில் ஆஸ்திரேலியா அணி மீது கவனம் செலுத்தட்டும் என கம்பீர் பதில் கொடுத்திருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இந்தியா இழந்ததோடு, முதன்முறையாக 2 போட்டிக்கு அதிகமான போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது.

இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றும் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரை 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதற்கு முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

அப்போது ரிக்கி பாண்டிங் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை விமர்சிப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலியா அணி மீது கவனம் செலுத்தவும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கவுதம் கம்பீருக்கு ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். "என்னுடைய கருத்துக்கு கவுதம் கம்பீரின் எதிர்வினையை படித்து ஆச்சர்யப்பட்டேன். இருந்தபோதிலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், மிகவும் எளிதாக நிதானத்தை இழக்கும் கேரக்டர் (prickly character). ஆகவே, திருப்பிச் சொன்னதில் எனக்கு என்ற ஆச்சர்யமும் இல்லை" என்றார்.

விராட் கோலி கடந்த சில வருடங்களில் 2 இரண்டு டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். மற்றொரு வீரராக இருந்திருந்தால் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கமாட்டார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News