டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து டி20-யிலும் ஓய்வு அறிவித்தார் ஷகிப் அல் ஹசன்
- ஷகிப் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன், ஆல் ரவுண்டர் வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த ஷகிப் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். இதுவரை வங்கதேசம் கிரிக்கெட் அணிக்காக 129 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷகிப், அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஓய்வு குறித்து பேசிய ஷகிப், "புதிய வீரர்களை கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். டி20 கிரிக்கெட்டிற்கும் இது பொருந்தும். இது குறித்து தலைமை தேர்வுக் குழு தலைவர் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அனைவருமே, இது தான் கடந்து செல்லவும், புதிய வீரர்கள் வருவதற்கும் சரியான தருணமாக இருக்கும் என்று உணர்ந்தோம்," என்று தெரிவித்தார்.
37 வயதான ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடுகிறார். இந்த போட்டி வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள வங்காள தேசிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது.